பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

Share

சென்னை: பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பபாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன். அண்ணாமலைக்கு, நிர்மல்குமாரின் வளர்ச்சி (பா.ஜ.க.விலும்) சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடிய வில்லை. ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார்.

ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம். அண்ணாமலை கடந்த மாதம் (பிப்ரவரி) டெல்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு IT Wing மற்றும் sports and skill development ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால் தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள C.T.R. நிர்மல்குமார் அவர்களின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com