பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா கண்டனம் – News18 Tamil

Share

முகமது நபிகள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

டிவி விவாதத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ – மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது.

முகமது நபிகள் குறித்த பாஜக நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரீப், இந்தியாவை தற்போது ஆட்சி செய்யும் கட்சி இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம்சாட்டியிருந்தார். உலக நாடுகள் இதை கவனத்தில் கொண்டு இந்தியாவை கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அகமதியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு உலக நாடுகளே சாட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குறுகிய எண்ணம் வேண்டாம்: இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா பதிலடி

இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த மதிப்பு அளித்து வருவதாகவும், இங்கு பாகிஸ்தானை போல மதவெறியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வகுப்புவாத நல்லிணக்கத்தை தூண்டுவதற்கு பதிலாக அங்குள்ள சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com