பாகிஸ்தானின் சொதப்பல் பேட்டிங்கால் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு

Share

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

8வது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.

16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்-12 சுற்றில் வெற்றி பெற்று இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் கோப்பை இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதி ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்க வீரர் ரிஸ்வான் 15 ரன்களுக்கும் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: பார்ட்டியில் ஓடியபோது கால்வழுக்கி விபத்து.. மேக்ஸ்வெலுக்கு கால் முறிவு: 3 மாதங்களுக்கு நோ கிரிக்கெட்!

இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட்டை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக ஹான் மசூத் 38 ரன்களும் சதப் கான் 20 ரன்களை எடுத்தனர்.

சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டையும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜொர்டன் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com