பவர்பிளேயில் 500 டாட் பால்கள் வீசி புவனேஸ்வர் குமார் புதிய உலக சாதனை

Share

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டி20 போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது.

இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே வழங்கி மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிறப்பான பந்துவீச்சு காரணமாக வெற்றிக்கு வித்திட்ட புவனேஸ்வர் குமார் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்நிலையில், இந்த போட்டியின் போது மற்றொரு முக்கிய சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளேவில் 500 டாட் பால்களை வீச்சிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார். 383 டாட் பால்களை வீசி இரண்டாவது இடத்தில் மேற்கு இந்திய தீவுகள் பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி வீசியுள்ளார். நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 368 டாட் பந்துகளை வீசி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: டி20 தொடரை வென்றது இந்தியா- இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடர் வெற்றி

மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், புவனேஸ்வர் குமார் தனது அபார பார்மை தொடர்ந்து மீண்டும் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தருவாரா என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெரும் பட்சத்தில் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைட்வாஷ் செய்த பெருமையை இந்தியா பெறும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com