திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களுடன் காட்டுப்பகுதிக்குள் சுற்றி திரிந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம், தோகைமலை அடுத்த உள்ள பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.