கரூர் மாவட்டம்குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று நாகனூர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் அனைத்து முட்டைகளும் தரம் நன்றாக இருந்துள்ளது.
சத்துணவு அமைப்பாளர் சென்ற வாரம் பெறப்பட்ட சில முட்டைகளை ஒரு வாரத்திற்கு மேலாக காலம் கடந்தும் அப்புறப்படுத்த தவறியதால் சில முட்டைகள் அழுகிய நிலையில் உள்ளது தெரியவந்தது.
Also Read : ஒமைக்ரானுக்கு மத்தியில் தமிழக சுகாரதாரத் துறையினருக்கு புதிய சவால்
பணியில் கவனக் குறைவாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் கண்காணிக்கத் தவறிய பள்ளி தலைமையாசிரியை ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற தவறு வரும் காலங்களில் தவிர்க்க உரிய அறிவுரைகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.