விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே நேர்த்தியாயிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக அ.முக்குளம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.முக்குளம் அருகேயுள்ள நேர்த்தியாயிருப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 24) என்பவர் காரில் சுமார் 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், மனோகரனை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (23), திருப்பூரைச் சேர்ந்த சரவணன் (26), அபுபக்கர் சித்திக் (20), பிரதீப் (23), கேரளாவைச் சேர்ந்த சரத்குமார் (28), கோவையைச் சேர்ந்த சரவணன்(25), மேலராங்கியம் பகுதியைச் சேர்ந்த கொம்பையா (41) ஆகியோரையும் போலீஸார் அழைத்து விசாரணை செய்தனர்.
`பள்ளிக் கல்லூரி மாணவர்களே டார்கெட்!’ – நரிக்குடி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்… 8 பேர் கைது | 30 kilo ganja seized by the police near narikudi of virudhunagar district
Share