அழகான வணக்கங்கள். கொரோனோ என்று சொல்லி சொல்லியே இரண்டு வருடம் ஓடி விட்டது. ஒருவழியாக பள்ளி துவங்கி விடுமுறை விடும் காலம் வந்துவிட்டது. வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீசன் இது. வித்தியாசமான சுவையான உணவை எதிர்பார்த்து,’ இன்றைய ஸ்பெஷல் என்னமா’… என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கிறீர்களா ?! .. இதோ வித்தியாசமான சில இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பிகளைப் பார்க்கலாம்…
எனது மைத்துனர் ஆன்சைட் ப்ராஜெக்ட் விஷயமாக கடந்த ஆறு வருடங்களாக தாய்லாந்தில் இருக்கிறார். அங்கு சென்ற புதிதிவ் அவருக்கு பயங்கரமான ‘ஹோம்சிக்’ வந்துவிட்டது .. காரணம் அவர்களின் உணவு முறைதான்.. பெரும்பாலும் எல்லா ஹோட்டல்களிலும் நான்வெஜ் ரெசிபிகள் தான் இருந்தனவாம். அதிலும் அவை அனைத்தும்’ raw’ ஆகத்தான் இருக்குமாம்.. காரம் மசாலா சுத்தமாக இல்லை.. எல்லாமே half cooked food ஆகத் தான் இருந்தனவாம். இவர் பெரும்பாலும் காரம் சற்று தூக்கலாக சாப்பிடுவார். தாய் உணவை சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதாம். அப்போ ஒரு ரெஸ்டாரண்ட்ல ‘கிரீன் தாய்கறி’ன்னு ஒரு உணவை சாப்பிடும்போது, புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல் இவருக்கும் ஞானம் வர… அந்த கிரீன் தாய்கறியை வீட்டில் அவருக்கு ஏற்றார் போல் செய்து சாப்பிட்டு இருக்கிறார். மிகவும் நன்றாக இருந்ததால் விடுமுறையில் ஊருக்கு வரும்போது எனக்கு சொன்னார். அண்ணி, இது போல் இந்த ‘ கிரீன் தாய்கறி’யை நீங்கள் வீட்டில் செய்யுங்கள் அண்ணனுக்கும் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் என்றார்.
அவர் சொன்ன கிரீன் தாய்கறி ரெசிபி..(green thai curry)
(நம்ம ஸ்டைலில்)
பீன்ஸ் கேரட் தலா 10
வெங்காயம்-2
குடமிளகாய்-1
புரோக்கோலி_கொஞ்சம்
சுக்கினி (zucchini) -1
Galangal- (இஞ்சி மாதிரி இருக்கும் ஒரு சிறு துண்டு)
Kafirlime (இது ஒரு வித இலை) – சிறிதளவு
Lemongrass (இது ஒரு வித இலை) -சிறிதளவு
basilஇலை – சிறிதளவு
மிளகு -1டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையான அளவு
கெட்டியான தேங்காய் பால் 2 கப்
பீன்ஸ் ,கேரட் ,குடமிளகாய், புரோகோலி,வெங்காயத்தை கியூப் ஆகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக்கொள்ளவும்.