பல் இல்லாத நகர சபைகள்!|government strengthen municipality sabha will take steps

Share

கிராம சபை உங்களுக்குத் தெரியும். கடந்த சில ஆண்டுகளாக அதுபற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சிகளின் அடிநாதமான கிராமங்களில் ஆண்டுதோறும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்தநாள் என குறிப்பிட்ட சில நாள்களில் ஒட்டுமொத்த கிராமமக்களும்கூடி, அந்தக் கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, கிராமம் தொடர்பான நல்லது கெட்டதுகள் தொடர்பாக முடிவெடுப்பதுதான் கிராம சபை. இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மக்கள் நேரடியாக பங்கேற்கிறார்கள் என்பதைத்தான். அத்தகைய கிராமசபை கொரோனா நேரத்தில் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், தானே பல கிராமங்களுக்கு நேரில் சென்று கிராம சபையைக் கூட்டினார். அதேபோல நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் கிராம சபையைக் கூட்டினார்.
இதேபோல நகர்ப்புற உள்ளாட்சிகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் மக்கள் நேரடியாக பங்கேற்கும் விதமாக ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி என்று இரு அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், இதை தமிழகத்தில் முப்பது ஆண்டுகளாக உருவாக்கவே இல்லை. இந்நிலையில், மிகச்சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு இதை உருவாக்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், கிராம சபை அளவுக்குக்கூட அதிகாரமற்றவைகளாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதுதான் வேதனை. மக்கள் எந்தவிதத்திலும் ஆள்வோரையும் மக்கள் பிரதிநிதிகளையும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்கிற வகையிலேயே, பல் இல்லாத சபைகளாக இந்த அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது இந்த அரசு.
எப்படியெல்லாம் மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான பட்டியல் இதோ…

நகர சபைகள்

நகர சபைகள்

நகர சபைகள்

நகர சபைகள்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com