பயம்னா என்னனு தெரியல… வைபவ்வை வியந்து பாராட்டிய ஹர்திக் பாண்டியாவின் செயல் வைரல் | Hardhik pandya prises vaibav sooryavanchi

Share

ஹர்திக் பாண்டியாவின் மனமார்ந்த பாராட்டு!

போட்டிக்குப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இளம் வீரர் வைபவ்வின் ஆட்டத்தைக் கண்டு தனது பிரமிப்பை மறைக்கவில்லை. “ஒரு 16 அல்லது 17 வயது சிறுவன் இப்படி விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள், இந்தப் போட்டிக்குத் தயாராகும்போதே நாங்கள் அவரைப் பற்றித்தான் அதிகம் விவாதித்தோம்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அவர் பேட்டிங் செய்யும் விதம், அவரிடம் இருக்கும் அந்தத் துணிச்சல், அவர் ஆடும் ஷாட்கள் எல்லாம் அபாரமானவை. அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று கூறி தனது விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தினார்.

போட்டி முடிந்ததும் வைபவ்வை நேரில் சென்று பாராட்டிய பாண்ட்யாவின் செயல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜெய்ஸ்வாலின் ஆங்கர் ஆட்டம்!

ஒருபுறம் வைபவ் அதிரடியில் மிரட்ட, மறுபுறம் ஜெய்ஸ்வால் நிதானத்தையும், நேர்த்தியையும் கலந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.

Yashasvi Jaiswal

Yashasvi Jaiswal
Anupam Nath

கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர், 32 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்தார். இந்த ஜோடியின் 80 ரன் பார்ட்னர்ஷிப்பால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com