பனீர் வைத்து ஒரு முறை இந்த மாதிரி அல்வா ட்ரை பண்ணி பாருங்க… அப்பறம் டெய்லி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க..!

Share

இனிப்பு வகைகளில் பலருக்கும் ஃபேவரட்டான ஸ்வீட் என்றால் அது அல்வா தான். அல்வாவை பார்த்தவுடனே கட்டாயமாக நமக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். இந்தியாவில் பண்டிகைகள் மற்றும் சிறப்பு விசேஷங்களுக்கு கட்டாயமாக பெரும்பாலான வீடுகளில் அல்வா இல்லாமல் இருக்காது. அல்வாவில் பல வகைகள் உண்டு. பாம்பே அல்வா, காசி அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, அசோகா அல்வா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான பன்னீர் அல்வா ரெசிபி. இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் புரோட்டின் நிறைந்த ஆரோக்கியமான ஒரு உணவாகவும் கருதப்படுகிறது. ஆகையால் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக சாப்பிடலாம். இப்பொழுது பன்னீர் அல்வா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பன்னீர்- கப்
  • பால் – 1/2 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • ஏலக்காய் பொடி – 1 கப்
  • நெய் – 1 டீஸ்பூன்
  • முழு பாதாம் பருப்பு – 8 முதல் 9
  • நறுக்கிய பாதம் துண்டுகள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

பன்னீர் அல்வா செய்வதற்கு முதலில் பன்னீரை எடுத்து அதனை கைகளால் துண்டு துண்டாக பிசைந்து கொள்ளவும். தேவையானால் நீங்கள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டியும் பயன்படுத்தலாம்.

இப்பொழுது நாம் பிசைந்து வைத்த பன்னீரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனை அரைத்துக் கொள்ளவும். பல்ஸ் மோடில் அரைப்பது சரியாக இருக்கும்.

இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும். நெய் உருகியதும் அதில் நாம் அரைத்து வைத்த பன்னீரை சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வறுக்கவும். பன்னீர் லேசான பிரவுன் நிறமாக மாறியவுடன் அதில் பால் சேர்க்கவும்.

நாம் சேர்த்த பால் நன்றாக சுண்டி வரும் பொழுது தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும். இப்பொழுது கடாயை மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளலாம். இடை இடையே அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விட வேண்டும்.

பால் முழுவதுமாக வற்றி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

இப்பொழுது அடுப்பை அணைத்து ஏலக்காய் தூள், நறுக்கி வைத்த பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.

ஓரளவு ஆறியதும் பன்னீர் அல்வாவை கிண்ணங்களில் சேர்த்து அதன் மீது முழு பாதாம் பருப்பு வைத்து கார்னிஷ் செய்து பரிமாறவும்.

First published:

Tags: Paneer, Paneer recipes

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com