பந்துவீச்சைக் கிழித்துத் தொங்கவிட்ட டிம் டேவிட் – News18 Tamil

Share

இங்கிலாந்தில் நடைபெறும் வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் லங்காஷயருக்காக ஆடும் நம் மும்பை இந்தியன்சின் மலை மனிதன், அதிரடி மன்னன் டிம் டேவிட் 25 பந்துகளில் 60 ரன்கள் வெளுத்துக் கட்ட லங்காஷயர் அணி 98/6லிருந்து 183/7 என்று என்று பெரிய இலக்கை நிர்ணயிக்க வொர்ஸ்டர்ஷயர் அணி 171/8 என்று தோல்வி கண்டது.

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லங்காஷயர் பவர் ப்ளேயில் 59/3 என்று ஆனது. அதன் பிறகு ஸ்டீவன் கிராஃப்ட் (22), லியாம் லிவிங்ஸ்டன்(26) கொஞ்சம் அணியை நிலை நிறுத்தினர். அதன் பிறகு இருவரும் ஆட்டமிழக்க, மற்றொரு வீரர் டேனி லாம்ப் சடுதியில் வெளியேற 13 ஓவர்களில் 98/6 எனும்போது இறங்கினார் காட்டடி மன்னன் டிம் டேவிட்.

இறங்கியவுடன் 2 பெரிய சிக்சர்கள். பிறகு 2 நேர் பவுண்டரிகள். லூக் உட் இவருக்கு உறுதுணையாக ஆட இருவரும் 50 ரன்கள் கூட்டணியை நிறைவு செய்தனர்.

பிறகு மேத்யூ வெய்ட் என்பவரை 2 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார் டிம் டேவிட் இதன் மூலம் தன் அரைசதத்தை எடுத்தார். 20வது ஓவரில் டிம் டேவிட் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 25 பந்தில் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்த போது லங்காஷயர் ஸ்கோர் 179 ரன்களுக்கு உயர்ந்தது, பிறகு 183/6.

பிறகு லங்காஷயர் ஸ்பின்னர்கள் வொர்ஸ்டர்ஷயரை கட்டிப்போட 10 ஓவர்களில் 100 ரன் தேவை என்ற விகிதம் 6 ஓவர்களில் 70 என்று ஆனது. கொலின் மன்ரோ 36 பந்தில் 53 எடுக்க, ஜாக் லிபி 33 ரன்களை மட்டுமே எடுத்தார். முன்னதாக ப்ரெட் ஆலிவியரா 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 எடுத்தார், மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 171/8 என்று முடிந்தது வொர்ஸ்டர்ஷயர்.

லங்காஷயர் தரப்பில் கிளீசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லங்காஷயர் 2 போட்டிகளில் 1 வெற்றியுடன் 3 புள்ளிகள் எடுத்து அட்டவணையில் 2ம் இடத்தில் உள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com