`பதக்கங்களே எங்கள் ஆன்மா; அவற்றை வீசிய பிறகு…’- கங்கைக் கரையில் கண்ணீர்விட்ட மல்யுத்த வீராங்கனைகள்| Wrestlers’ protest Athletes head back upon farmer leader’s request

Share

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிவேண்டி, மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைதுசெய்தனர். இதன் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே, “இன்று மாலை 6 மணிக்கு எங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப்போகிறோம். பதக்கங்கள்தான் எங்கள் உயிர், ஆன்மா. அவற்றை வீசிய பிறகு எங்கள் வாழ்வில் அர்த்தமில்லை. சாகும்வரை இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

மல்யுத்த வீராங்கனைகள்

மல்யுத்த வீராங்கனைகள்

அதைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக், ஒலிம்பிக் பதக்கம் உட்பட தான் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதற்குத் தயாராகும் விதமாக, பதக்கங்களைப் பையில் எடுத்துவைக்கும் வீடியோ வெளியானது. இந்த நிலையில் ஹரித்வாரிலுள்ள கங்கை நதிக்கரைக்கு பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச வந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com