பணமோசடி வழக்கு: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்துக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்! | Shiv Sena MP Sanjay Raut, close to Uddhav Thackeray, gets bail after 3 months

Share

சிவசேனா ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் ராவத் மும்பை கோரேகாவ் பகுதியில் இருக்கும் குடியிருப்பு காலனியை மேம்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சஞ்சய் ராவத் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து சிவசேனாவினர் பல இடங்களில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண மோசடி தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு இரண்டு முறை சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தன்மீது குற்றம்சுமத்தப்பட்டிருப்பதாகக் கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார் சஞ்சய் ராவத்.

சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்

இதையடுத்தே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டார். மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியான காலக்கட்டத்தில் அருகில் இருக்காத வகையில் கைதுசெய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சஞ்சய் ராவத் பா.ஜ.க-வுடன் சிவசேனா கூட்டணி வைக்கத் தடையாக இருந்தார் என்றும் பா.ஜ.க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், சஞ்சய் ராவத் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 21-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்

இதில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கியது. இதற்காக சஞ்சய் ராவத், இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிரவின் ராவத் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சஞ்சய் ராவத் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியில் வருகிறார்.

சஞ்சய் ராவத் தொடர்பான வழக்கில் ரூ.1,034 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியிருக்கிறது. இதில் உத்தவ் தாக்கரே உறவினர் பிரவின் ராவத் ரூ.112 கோடி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் சஞ்சய் ராவத் மனைவி பெயரிலிருந்த வீட்டை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்திருக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com