பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Share

திருவள்ளூர்: மாவட்ட இணை பொது செயலாளர் தொழுவூர் கபிலன் ஒருங்கிணைத்தார். தொகுதி தலைவர் திருவூர் ஆர்.டில்லி தலைமை தாங்கினார். முன்னதாக  மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தண்ணீர்குளம் வி.பி.ராஜேஷ்குமார்  வரவேற்றார். தொகுதி துணைத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான வதட்டூர் நாகராஜ், தொகுதி நிர்வாகிகள் தலக்காஞ்சேரி பிரபு, மணமேடு தயாநிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக செயலாளர் அம்பேத் ஆனந்த், மாவட்ட பொருளாளர் பூவை எம்.ஜெய்பீம் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் திருவள்ளூர் வெற்றிவேந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்னர். இதில் மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், எம்.ரவி, ஜேம்ஸ், மாயா செல்வம், ஈசாக், சிலம்பரசன், மணிமாறன், தமிழ், சரண்ராஜ், ஞானவேல், கார்த்திக், லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சென்னை அம்பேத்கர்  மணிமண்டபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் தலைமையில், சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலை அடைய பகுஜன் யாத்திரை துவங்க உள்ளது சமத்துவ தலைவர் தலைமையில் நடைபெறும் பகுஜன் யாத்திரையை முன்னிட்டு பூந்தமல்லி தொகுதியில் சிறப்பான முறையில் வரவேற்று அனைத்து கிராமங்களிலும் தலைவர் அவர்களை சிறப்பான வரவேற்போடு அழைத்துச்சென்று பகுஜன் யாத்திரையை வெற்றிபெற செய்வது எனவும், அப்போது அனைத்து கிராமங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சியின்  கொடியேற்றுதல் மற்றும் கல்வெட்டு திறப்பது எனவும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் தொகுதியில் இருக்கின்ற அனைத்து பூக்களிலும் பூத்கமிட்டி அமைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com