நோயல் டாடா: டாடா குழுமத்தின் புதிய தலைவரான இவர் யார்? எப்படி தேர்வு செய்யப்பட்டார்?

Share

நோயல் டாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயல் டாடா (கோப்புப் படம்)

டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக நோயல் டாடா பதவியேற்றுள்ளார். இது, டாடா குழுமத்தின் பல அறக்கட்டைகளை உள்ளடக்கியது.

நோயல் டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை இரவு காலமானார். அதன் பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, 67 வயதான நோயல் நேவல் டாடா தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நோயல் டாடா ஏற்கெனவே டாடா சன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். ரத்தன் டாடாவுக்கு பிறகு, தற்போது நோயல் டாடா சுமார் ரூ.34 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை வழிநடத்துவார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com