நைஜீரியா: வெள்ளத்தால் அழிந்த விவசாயம், உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம்

Share

காணொளிக் குறிப்பு, நைஜீரியாவில் இந்த ஆண்டு 22 மில்லியன் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது

நைஜீரியா: வெள்ளத்தால் அழிந்த விவசாயம், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

இந்த ஆண்டு நைஜீரியாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால், அரை மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் அழிந்துவிட்டன.

அங்கு இந்த ஆண்டு 22 மில்லியன் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றம் விவசாயிகளுக்குப் பெரும் பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே புதிய வழிகள், நீர் மேலாண்மை மற்றும் நீர் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துதல் என நாம் காலநிலைக்கு ஏற்ற ஸ்மார்ட் விவசாயத்திற்கு மாற வேண்டும்” என்கிறார் நைஜீரியாவின் எஃப்.ஏ.ஓ பிரதிநிதி டாமினிக் காஃபி கோகூ.

உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து வருவதாக அடமாவா மற்றும் தாராபாவில் உள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள். உதாரணமாக, மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட வறட்சியைத் தாங்கும் பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முயல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com