காத்மாண்டு: நேபாள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 5 கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தகால் என்ற பிரசண்டா கூட்டணியில் இருந்து வௌியேறினார்.
பின்னர் சிபிஎன்- யுஎம்எல் கட்சி பிரசண்டாவுக்கு ஆதரவு தருவதாக கூறியது. இதையடுத்து நேபாள புதிய பிரதமராக பிரசண்டா பதவி ஏற்றார். இந்நிலையில், பிரதமர் பிரசண்டா வரும் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருகிறார் என்று நேபாள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.