உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நேபாளம் அணியை வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்றுள்ளது. ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும் பின்னர் சுதாரித்து விளையாடி ரன்களை சேர்த்தது. 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருபோது இணைந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் சிறப்பான விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ஹோப் 132 ரன்களும் நிகோலஸ் பூரன் 115 ரன்களும் எடுக்க இந்த இணை 4 ஆவது விக்கெட்டிற்கு 216 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 339 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நேபாள அணி வீரர்கள் விளையாடினர்.
இதையும் படிங்க – சர்வதேச யோகா தினத்தை கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்…
49.4 ஓவர்கள் முடிவில் நேபாள அணியால் 238 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக அந்த அணியின் ஆரிப் சேக் 63 ரன்களும், குல்சன் ஜா 42 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கேப்டன் ஷாய் ஹோப்பிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.