விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். RPE65 எனப்படும் மரபணுவில் பிறழ்வு இருப்பது கண்டறியப்பட்டால் `லக்ஸ்டர்னா’ ( Luxturna) எனப்படும் ஜீன் தெரபியின் மூலம் குணப்படுத்த முடியும். எந்த மரபணுவில் பிரச்னை உள்ளதோ, அதை அடினோவைரஸின் வெக்டாரின் உள்ளே நுழைத்து, அது விழித்திரையின் அடியில் ஊசியாகச் செலுத்தப்படும்.
இதன் மூலம், கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ள இருக்கும் செல்களுக்கு இது உயிரூட்டி, அவற்றைப் புத்துணர்வு பெற வைக்கும். இதுதான் இந்தச் சிகிச்சையின் அடிப்படை. ஆனால், இந்த ஊசியின் விலை கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய். இந்தியாவில் இந்த ஊசி கிடைப்பதுமில்லை. அமெரிக்காவில் சிலருக்கு கொடுத்து ஓரளவு முன்னேற்றத்தைப் பார்த்திருக்கிறார்கள்.
இது தவிர, ரெட்டினல் இம்ப்ளான்ட் சிகிச்சையின் மூலம் பார்வையைத் திரும்பப் பெறச் செய்ய முடியும் என்கிறார்கள். ஆனால், இதுவும் ஆய்வு நிலையில்தான் இருக்கிறது. கண்களுக்கும் மூளைக்குமான தொடர்பான ஆக்ஸிபிட்டல் கார்டெக்ஸ் வழியாகத்தான் நாம் படிக்கிறோம். அதில் எலக்ட்ரோடு வைத்து தூண்டச் செய்து, வெளிச்சத்துக்கும், பொருள்களைக் கண்டுபிடிக்கவும் பரிசோதனைகளை விலங்குகளிடம் நிகழத்தியிருக்கிறார்கள். இதுவும் ஆய்வுநிலையில்தான் இருக்கிறது.
ரெட்டினல் ட்ரான்ஸ்ப்ளான்ட்டேஷன் என இன்னொரு தீர்வும் இருக்கிறது. கல்லீரல் மாற்று, இதய மாற்று மாதிரி விழித்திரை மாற்று சிகிச்சை. இப்படி எல்லா சிகிச்சைகளும் எட்டா உயரத்தில் இருக்கும் நிலையில், நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்… விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்ப்பதும்தான்.
– பார்ப்போம்
– ராஜலட்சுமி