நீலகிரி ரெட் அலர்ட்: `3,000 பொறுப்பாளர்கள்… தயார்நிலையில் கட்டுப்பாட்டு மையங்கள்!’- ஆட்சியர் தகவல் | nilgiris district collector about precautious moves on heavy rain

Share

இதனடிப்படையில் அமைச்சர் நீலகிரியில் முகாமிட்டு மழை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சிகள், மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை, நகராட்சிகள், பொது மற்றும் நீர்வள ஆதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்வாரியம், மருத்துவத்துறை ஆகியவை உஷார்படுத்தப்பட்டிருக்கின்றன. 68 ஜெனரேட்டர்கள், 18 ஜே.சி.பி இயந்திரங்கள், மரங்களை வெட்டி அகற்ற 124 வார்ஷாக்கள், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்ல 106 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில் 283 பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

3,300-க்கும் அதிகமான முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் இருக்கின்றனர். பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்தும், அவசர உதவிகளுக்கும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதேபோல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுபாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி கோட்டம் 0423-2445577, குன்னூர் கோட்டம் 0423-2206002, கூடலூர் கோட்டம் 04262-261295, ஊட்டி வட்டம் 0423-2442433, குன்னூர் வட்டம் 0423-2206102, கோத்தகிரி வட்டம் 04266-271718, குந்தா வட்டம் 0423-2508123, கூடலூர் வட்டம் 04262-261252, பந்தலூர் வட்டம் 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com