நீரிழிவு கண்டிப்பாக ஒரு விலை உயர்ந்த நோய் தான்… பாதிப்புகளைப் பட்டியலிடும் மருத்துவர்! | Diabetes is an expensive disease… doctor explains

Share

நீரிழிவு நோயை ஆரம்பகட்டத்தில் கண்டறிய, HbA1C (Hemoglobin A1C) எனும் மருத்துவ பரிசோதனையைச் செய்வர். அதில் சர்க்கரை அளவு 5.6 – 6.4 வரை இருந்தால் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டம் (Pre-diabetics) என தெரிந்துகொள்ளலாம். GTT (glucose tolerance test) பரிசோதனை மூலம் உங்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயின் தீவிரத்தைக் கண்டுபிடிக்கலாம். ஆரம்பகட்ட நீரிழிவு நோய் என்றால் மாத்திரை எடுத்துக் கொள்ளாமல், சரியான உணவுக் கட்டுபாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், மது மற்றும் புகைப் பழக்கத்தை விட்டுவிடுவது ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் தடுக்க முடியும்.

நீரிழிவின் ஆரம்பகட்டத்துக்கு முன்னரே, நம் உடல் நமக்கு பல எச்சரிக்கைகளைக் கொடுக்கும். ஒரு சிலருக்கு காலில் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, மயக்கம், சோர்வு, உடல் எடை குறைதல் போன்ற சில அறிகுறிகள் உடலில் தோன்றும். ஆனால் சிலருக்கு இந்த அறிகுறிகளே தோன்றுவதில்லை. இன்றைய காலகட்டத்தில் 18 வயதுக்கு மேல் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை மேற்கொள்வது சிறப்பு.

மேற்குறிப்பிட்ட ஆய்வில் கோவா, தமிழ்நாடு, கேரளா அகிய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கோவாவை பொறுத்தமட்டில் அங்கு பார்ட்டி, மதுபானம் ஆகியன அதிகம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com