தமிழ் சினிமாவின் பீம் பாய் பிரவீன் குமார் சோப்டி மறைவு!
1988-ம் ஆண்டு வெளியான மகாபாரதம் தொடரில் பீமனாக நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பீம் பாயாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனங்களை வென்றார். விளையாட்டிலும், சினிமாவிலும் நுழைந்து வெற்றிப்பெற்ற பிரவீன் குமார், பின்னர் அரசியலிலும் நுழைந்தார். 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவர், அக்கட்சி சார்பாக டெல்லி பஜ்ஜித்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பின்னர், ஓரிரு வருடங்கள் கழித்து பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் நேற்றிரவு மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பிரவீன் குமார் சோப்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எல்லை பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.