வெற்றி தோல்வியை கடந்து ரசிகர்கள் இந்த அணியை ஆதரிப்பதால்தான் இதை ஒரு குடும்பம் என்கிறோம். CSK ஒரு Emotion. அதனால்தான் தோனி மைதானத்துக்குள் வரும் போது அத்தனை ஆர்ப்பரிப்பு. தோனி சார் நீங்கள் நம்பமாட்டீர்கள்…நான் 25 கி.மீ தள்ளி ECR இல் இருக்கிறேன். அங்கு வரைக்கும் உங்களுக்கான ஆர்ப்பரிப்பு கேட்கிறது’ என்றார்.

‘
தோனியும் சிவகார்த்திகேயனும் உரையாடுகையில்,
SK :தோனி சார் உங்களிடம் ஒரு முறை ஓய்வு குறித்து கேட்கையில், ‘Definitely Not’ என்றீர்கள். ஓவ்வொரு சீசனிலும் நீங்கள் அதையே சொல்ல வேண்டும்.
தோனி : அது ரொம்ப கடினம்.
SK : நீங்கள் 60 வயது வரை ஆட வேண்டும்.
தோனி : என்னுடைய பிட்னஸ் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது.
SK : நீங்கள் பிட்டாகத்தான் இருக்கிறீர்கள்
தோனி : I Will Try.
இந்த நிகழ்வுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி சேப்பாக்கத்தை அதிர வைத்தது.