“நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்” – அமித்ஷாவிற்கு கனிமொழி பதில்

Share

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள்’ என்று பேசியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், இன்று அமித்ஷா ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், ‘இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்காது. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்’ என்று பேசியிருக்கிறார்.

இதை குறிப்பிட்டு, திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அமித்ஷா, “எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. ஆனால், நம் மொழியை போற்ற வேண்டும். நம் மொழியை பேச வேண்டும். நம் மொழியில் சிந்திக்க வேண்டும்” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com