எனவே, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முதல்நாளே, குடும்பச் சான்றிதழ், அடையாள அட்டைகள், திருமணச் சான்றிதழ், புகைப்பட ஆல்பங்கள், வீடியோக்களை ஒரு பையில் போட்டு தனியாக வைத்திருந்தேன். நிலநடுக்கத்தின் முதல் அதிர்விலேயே அந்த ஆவணங்கள் போட்டு வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் படுக்கையறையில் உள்ள ஒரு சிறிய அலமாரியில் ஒழிந்துக் கொண்டோம். எங்களின் கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்தபோது எங்களைக் எப்படியோ காப்பாற்றிக் கொண்டோம்.
எங்கள் அண்டை வீட்டார் பலரும் இடிபாடுகளில் சிக்கி மரணித்துவிட்டார்கள். ஆனால், நானும் என் குழந்தைகளும், ஆவணங்களுடன் உயிர் தப்பினோம். நாங்கள் உயிரோடு இருப்பது கனவா என இப்போதும் யோசிக்கிறேன். ஏதோ ஒரு அதிசயத்தால் குழந்தைகளும், நானும் உயிர் தப்பியிருக்கிறோம். ராணுவ அதிகாரியான என் கணவரும் உயிர் பிழைத்திருக்கிறார். இடிபாடுகளில் காயம் ஏதுமின்றி சிக்கியிருந்த எங்களை மீட்பு பணியாளர்கள் மீட்டனர். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்ததில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருக்கிறார்.