மேட்டூர்: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2வது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட 1 அலகும் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 1400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குறைந்த அளவு நிலக்கரி இருப்பதால் 1 அலகுகளில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.