நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு – ‘மிஷன் சௌத் இந்தியா’வின் ஒரு பகுதியா?

Share

  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழ்

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், @narendramodi/Twitter

தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் (ஆந்திர பிரதேசம்), கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர்.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நால்வருக்கும் தன் ட்விட்டர் பக்கத்தில் தனித்தனியாக வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார். அவற்றில், நான்கு பேருடைய தனிச்சிறப்புகளை குறிப்பிட்ட மோதி, இளையராஜா குறித்த பதிவில், “எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர்” என குறிப்பிட்டிருந்தார்.

நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் நால்வரும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவர்களின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமா அல்லது அம்மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த அக்கட்சி கையிலெடுத்த உத்தியா என்ற கேள்வி பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்துள்ளது. கர்நாடகா தவிர்த்த மற்ற 4 தென்னிந்திய மாநிலங்களில் பாஜக தன் இருப்பை விரிவுபடுத்தவும் ஆட்சியில் அமரவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வரும் நிலையில், தென்மாநில ஆளுமைகளை முன்னிறுத்துவது அதில் ஒரு பகுதியா என்றும் கேள்வி எழுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com