நித்தியானந்தாவின் ‘கைலாசா’ 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்தது எப்படி? – குழம்பும் அமெரிக்கா

Share

30 நகரங்களுடன் 'கைலாசா' ஒப்பந்தம்

பட மூலாதாரம், Twitter/KAILASA’s SPH Nithyananda

நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான நித்தியானந்தா, உலகின் முன்மாதிரி நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து சாதித்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டையே உலுக்கி வருகிறது.

யார் இந்த நித்தியானந்தா?

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார் நித்யானந்தா மீதான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. பிரபல நடிகையுடன் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதன் பிறகு பெங்களூருவை அடுத்த பிடதியில் இருந்து முழு நேரமாக இயங்கத் தொடங்கிய நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com