நிடா அம்பானி பெருமிதம் – News18 Tamil

Share

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகளை 2023 ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வயாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், வயாகாம்18 நிறுவனம், ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டிகளுக்கான ஸ்பெஷல் பேக்கேஜ்களை இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிடா அம்பானி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ரூ. 20,500 கோடிக்கு Viacom18 பெற்றது. அதுமட்டுமல்லாமல், அடுத்த ஐந்தாண்டு சுழற்சியில் ஒரு சீசனுக்கு 18 பிரத்தியேகமற்ற முக்கியப் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்வதற்கான உரிமையையும் நிறுவனம் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் நிதா அம்பானி, Viavom18 வெளியிட்ட அறிக்கையில், கூறும்போது, “கிரிக்கெட் மற்றும் குறிப்பாக ஐபிஎல், சிறந்த விளையாட்டாக உருவெடுத்துள்ளது.இந்தியாவின் சிறந்தவற்றுள்ள் கிரிக்கெட்டும், ஐபிஎல்-ம் சிறந்த அடையாளம்” என்றும் கூறியுள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கும் போது, “விளையாட்டு நம்மை மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும், நம்மை ஒன்றிணைக்கும். கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் சிறந்த விளையாட்டின் அடையாளம். சிறந்த இந்தியாவின் அடையாளம். அதனால், இந்த மிகச்சிறந்த விளையாட்டு மற்றும் தலைசிறந்த தொடருடன் ஆழமாக இணைந்து செயல்படுவதை பெருமையாக உணர்கிறோம். கிரிக்கெட் ரசிர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஐ.பி.எல்லின் மிகச் சிறந்த அனுபவத்தைக் கொண்டு செல்வதுதான் எங்களுடைய இலக்கு. நம்முடைய நாட்டின் எல்லாப் பகுதிக்கும். உலகின் எல்லாப் பகுதிக்கும்” என்றார்.

வயாகாம் 18 அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “Viacom18 புகழ்பெற்ற ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களை விஞ்சி முன்னணி டிஜிட்டல் மீடியா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு இடமாக தன்னை அதன் பரந்த அளவில் நிலைநிறுத்துகிறது. வயாகாம் 18-ன் டிஜிட்டல் ஒளிபரப்பு மீடியா இந்தியாவிலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் தலைமைத்துவமாக திகழ தயார் ஆகி வருகிறது.

இந்த ஐபிஎல் உரிமைகள் மூலம், Viacom18 ஆனது இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்ல முடியும். இன்று இந்த பிரபலமான உள்ளடக்கத்தை அணுக முடியாத 60 மில்லியன் ஃப்ரீடிஷ் வீடுகள் உட்பட இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் ஐபிஎல் போட்டிகளைக் கிடைக்கச் செய்யும்.” என்று கூறியுள்ளது.

Viacom18 அடுத்த ஐந்து ஐபிஎல் சீசன்களுக்கான ஸ்ட்ரீமிங் உரிமையை வென்றது, டிஸ்னி ஸ்டார் தொலைக்காட்சி உரிமையை ரூ.23,575 கோடிக்கு வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com