நிகும்பலா ஹோமம்: தீங்கு உங்களை அணுகாதிருக்க சங்கல்பித்துக் கொள்ளுங்கள்

Share

இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பப்படும் புனித குங்குமம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை அல்லது பிரத்யங்கிரா தேவியை தியானித்து நம்பிக்கையோடு நெற்றியில் பூசி வரவேண்டும். இதனால் நிச்சயம் 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

நிகும்பலா ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

போட்டி பொறாமைகள் அதிகரித்திருக்கும் காலமிது. கொஞ்சம் உயர்ந்துவிட்டால் கூட உங்கள் சுற்றமும் உறவும் உங்களை வயிற்றெரிச்சலோடுப் பார்ப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விளைவு எத்தனை சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் தங்காமல் போகும். நல்ல காரியங்கள் நடைபெறாமல் தடைபடும். தொடர்ந்து மாற்றி மாற்றி ஏதாவது உடல் மற்றும் மனம் சம்பந்தமானக் கோளாறுகள் வந்தபடியே இருக்கிறோம். ஏன் என்றே தெரியாமல் சோர்வும் சோம்பலும் உங்களை வந்து அடையும். சின்ன சின்ன பிரச்னைகள் கூட வம்பு வழக்கு என்ற அளவுக்கு மாறும். இதெல்லாம் காரணம் உங்களைச் சுற்றி ஒரு எதிர்மறை ஆற்றல் சூழ்ந்துள்ளதையே காட்டும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு நிகும்பலா ஹோமம் என்கிறது ஆன்மிகம்.

ஸ்ரீராமர், பஞ்ச பாண்டவர் தொடங்கி இன்றைய பல அரசியல்வாதிகள் வரை பலருக்கும் வெற்றிகளும் நிவாரணங்களும் அளித்த ஒரே வழிபாடு நிகும்பலா ஹோமம் எனலாம். எங்கு தர்மம் அழிக்கப்பட்டு அதர்மம் நிலைநிற்கிறதோ, எங்கு நீதி தவறி தீமைகள் சூழ்கிறதோ அங்கு வாடும் அன்பர்களுக்கு உதவிட ஓடிவருபவள் ஸ்ரீபிரத்யங்கிரா தேவி. இவளுக்கான சிறப்பு ஹோமமோ இந்த நிகும்பலா ஹோமம். நரசிம்மரின் ஆவேசத்தை அடக்கத் தோன்றிய பிரத்யங்கிரா தேவி, பின்பு சரபரின் கட்டளையால் தீமைகளை அடக்கி ஒடுக்கும் தேவியாக விளங்குகிறாள் என்கின்றன புராணங்கள்.

Homam

தீய சக்திகளின் ஆற்றல் ஒடுங்கவும் இழந்த சொத்துக்கள், பதவி கிடைக்கவும். ஐஸ்வர்யம் பெருகவும். தோஷம் நீங்கவும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் நடைபெறும் இந்த மிளகாய் வற்றல் யாகம் விசேஷமானது. இதை மஹா உக்ர பிரத்யங்கிராதேவி ஹோமம் என்றும் அழைப்பர். அகால விபத்து, திடீர் ஆபத்து, கெட்ட கனவுகள், யாரோ என்னமோ செய்துவிட்டார்களோ என்ற வீண் அச்சம் எல்லாம் நீங்க இந்த ஹோமமோ சிறந்த பரிகாரம் என்றும பெரியவர்கள் கூறுகிறார்கள். மகாகாளி, பிரத்யங்கரா, நிசும்பசூதனி ஆகிய உக்கிர தெய்வங்களைப் போற்றி செய்யப்படும் இந்த ஹோமத்தால் தீமைகள் யாவும் விலகி நன்மைகள் சூழும் என்பது நம்பிக்கை.

இத்தகைய ஆற்றல் மிக்க இந்த ஹோமம் நியமப்படி வெகு சிரத்தையோடு நடத்தப்பட வேண்டும் என்பது நியதி. இதனால் 2025 ஜனவரி 12-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் மாலை 4.30 மணி முதல் நடைபெற உள்ளது. சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் இடையில் 12 கி.மீ.

நிகும்பலா ஹோமம்

தொலைவில் கொள்ளிடம் அருகே உள்ள மேலவல்லம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் கைகூடி உயர் பொறுப்புகள் பெறவும், வாழ்வில் ஏறுமுகம் காண்பதற்கும் நிகும்பலா ஹோமம் உதவும் என்கின்றன புனித நூல்கள். திருமணத் தடைகள், குடும்பத்தில் தொடர்ந்து வரும் சிக்கல்கள், வியாபார தொழில் தேக்கங்கள், மாறி மாறி வரும் மன – உடல் உபாதைகள் யாவையும் நீங்க இந்த நிகும்பலா ஹோமம் உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

புராண காலம்தொட்டே புகழ்பெற்று விளங்கிய இந்த மேலவல்லம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயம் பின்னாளில் பழுதுபட்டு மறைந்துவிட, தற்போது இது கட்டப்பட்டு புகழ்பெற்று விளங்கி வருகிறது. அநியாயமாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆலயத்தின் தேவி நீதி வழங்கும் அதிகாரியாக விளங்கி வருகிறாள். இவளை தஞ்சமைடைந்து வேண்டிக்கொண்டால் சகல தீமைகளும் நீங்கி வாழ்வில் ஏற்றமும் ஊக்கமும் பெறுவார்கள் என்பது இங்கு வந்து சென்றோர்களின் சத்திய வாக்கு.

இந்த ஆலயத்தின் பரிவார தெய்வங்களான ஸ்ரீலக்ஷ்மி கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீசுவர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீபத்ரா தேவி, ஸ்ரீகுபேரன் சகித ஸ்ரீ குபேர லக்ஷ்மி ஆகியவர்களும் இங்கு விசேஷ வரமளித்து காத்து வருகிறார்கள். வெகு சிறப்பான இந்த ஆலயத்தில் 2025 ஜனவரி 12-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் மாலை 4.30 மணி முதல் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. பின்னர் மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னப் பிரசாத விநியோகம் போன்ற வைபவங்களுக்கு நடைபெற உள்ளன.

இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பப்படும் புனித குங்குமம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை அல்லது பிரத்யங்கிரா தேவியை தியானித்து நம்பிக்கையோடு நெற்றியில் பூசி வரவேண்டும். இதனால் நிச்சயம் 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும். செய்வினை, எதிரிகள் அச்சம், மரண பயம் உள்ளிட்ட எல்லா அச்சங்களும் நீங்கிவிடும்.

நிகும்பலா யாகம்

இழந்தவைகளை மீட்பீர்கள். பதவி உயர்வு, எதிர்கால லட்சியங்களை அடைவீர்கள். செல்வவளம், கடன் பிரச்னை தீர்வு, வேலை-வெளிநாட்டு வாய்ப்புகள், வியாபார விருத்தி, தொழில் வளர்ச்சி, குழந்தைகள் நலம், ஆரோக்கிய வாழ்வு, தோஷ நிவர்த்தி என உங்களின் வேண்டுதல்கள் ஏதுவாக இருந்தாலும் நிச்சயம் இந்த வழிபட்டால் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

NIGUMBALA HOMAM QR CODE

NIGUMBALA HOMAM QR CODE

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com