ஆப்கள் மூலம் பணத்தை செலவிடுவது மிகவும் சிறந்த ஒன்று. காரணம் நம் கைகளில் நோட்டுகளாக வைத்திருந்தால் அதை திருடு போகலாம். கணக்குகளை எங்கேயும் தவற விடுவதற்கும் வாய்ப்புண்டு. இதே இந்த மாதிரி செயலிகள் மூலம் வரவு செலவு கணக்குகள் வைத்துக் கொண்டால் மிகவும் பாதுகாப்பாகவும் செலவு செய்யும் பணத்திற்கான கணக்கும் தெரிந்துவிடும்.
பணம் ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் சரி ஆப்களில் இருந்தாலும் சரி அதிகம் செலவு செய்வது ஒரு தனிநபரையைச் சார்ந்தது. ஒரு தனி நபர் நினைத்தால் செய்யும் செலவுகளை கணிசமாக குறைத்துக் கொள்ளலாம். தேவையானவற்றிற்கும், செலவு கணக்குகளை எழுதி வைத்தும், முன்னரே பிளான் செய்தும் செலவுகளை செய்யலாம். இப்படி செய்வதால் நம் செலவுகளைக் குறைக்கவும் முடியும்.
இவற்றை மறந்துவிட்டு இந்த மாதிரி ஆப்கள் இருப்பதாலேயே நான் அதிகம் செலவு செய்கிறேன் என்று சொல்வது தவறு, இனியாவது பணத்தை அதிகம் செலவு செய்வதற்கு ஆப்கள் தான் காரணம் என்று சொல்லாமல் அந்த பணத்தை சுய கட்டுப்பாட்டுடன் குறைவாக எப்படி செலவு செய்வது, முறையாக எப்படி சேமிப்பது என்பதை பற்றி யோசிப்பதே சிறந்தது என்று கூறி முடித்துள்ளார் ஆத்விக் டெக் சொலுயூஷநின் சர்வேஷ்.
நம் செலவுகளுக்கு நாம்தான் காரணம், ஆப்கள் அல்ல என்பது புரிந்ததா?