பொதுவாக, இந்த வித்தியாசம் தெரியாமல், அம்மா, அப்பா, மகன், மகள் போன்றவர்களை நாமினியாக நியமித்துவிடுகிறோம்.
அவர்களுக்கு அந்தப் பணத்தை கிளைம் செய்யவோ, அதற்கான நடைமுறையோ தெரிகிறதா என்பது மிக மிக முக்கியம்.
அம்மா, அப்பா பெயரை நாமினியாக போடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு வயதாகி இருக்கலாம்… அதிகம் விவரம் தெரியாதவர்களாக இருக்கலாம்… வெளி உலகம் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம்.

மகன், மகளை எடுத்துக்கொண்டால், மகள் அல்லது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முதலீடு என்றால் என்ன என்று தெரியுமா என்பதே பெரிய கேள்வி.
அதனால், இந்திய சட்டத்தின் படி, 18 வயதிற்குக் கீழ் உள்ள நாமினிகளுக்கு, காப்பாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.
நாமினியாகவும், காப்பாளராகவும் யாரை போடுகிறோம் என்பதில் மிக மிக கவனம் தேவை.
உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பத்திற்கும், வாரிசிற்கும் உங்களது பணத்தைக் கட்டாயம் எடுத்துச் செல்வாரா… உங்களுக்கு நம்பிக்கையானவரா… வங்கி, முதலீடு போன்ற நடைமுறைகளைத் தெரிந்தவரா என்பதைப் பாருங்கள்.