“நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்!” – ரோஜர் ஃபெடரரின் ஓய்வுச் செய்தி சொல்வது என்ன? | Tennis legend Roger Federer’s retirement message

Share

அடுத்த வாரம் ஆட இருக்கும் லேவர் கப் போட்டிகள்தான் எனது கடைசி ஏ.டி.பி டென்னிஸ் போட்டி. எதிர்காலத்தில் நான் டென்னிஸ் ஆடலாம். ஆனால் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். கசப்பு மருந்தை சுவைப்பது போன்ற முடிவுதான் இது. டென்னிஸ் எனக்குக் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இனி இழந்துவிடுவேன்.

ஆனால், நான் கொண்டாடவும் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தப் பூமியிலேயே அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக என்னை நினைக்கிறேன். எனக்கு டென்னிஸ் அபூர்வ திறமையாக வாய்த்தது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உச்சம் தொட்டேன். நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்.

Roger Federer | ரோஜர் ஃபெடரர்

Roger Federer | ரோஜர் ஃபெடரர்
Aaron Favila

இந்த நேரத்தில் என் மனைவி மிர்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அபூர்வமான பிறவி அவள். ஒவ்வொரு நிமிடமும் என்னோடு வாழ்கிறாள். ஒவ்வொரு ஃபைனலின்போதும் என்னை மனதளவில் தயார்படுத்துவாள். 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் கேலரிக்கு வந்து என் விளையாட்டை ரசித்து உற்சாகப்படுத்துவாள். நான் தந்த சிரமங்களைத் தாங்கிக்கொண்டு என் குழுவுடன் 20 ஆண்டுகள் பயணம் செய்தாள். எனக்கு ஆதரவு தந்த அற்புதமான என் நான்கு குழந்தைகளுக்கும் நன்றி.

புதிய இடங்களைத் தேடி அனுபவம் பெறவும், இனிமையான ஞாபகங்களைச் சேகரிக்கவும் என் மிச்ச வாழ்க்கையைச் செலவிடுவேன்.”

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com