`நாங்கள் பும்ராவை எதிர்கொண்டோம் என்று பேரக்குழந்தைகளிடம்..!’ – புகழ்ந்து தள்ளிய டிராவிஸ் ஹெட்

Share

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. முதல் போட்டியில் கேப்டனாக அபாரமாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராகவும் முன்னேறி அவர் சாதனை படைத்திருக்கிறார். பலரும் பும்ராவை பாராட்டி வருகின்றனர்.

ind vs aus

இந்நிலையில் பும்ரா வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக வருவார் என்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பாராட்டி இருக்கிறார். பும்ரா குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், “பும்ரா கிரிக்கெட்டில் ஒரு மகத்தான வேகப்பந்து வீச்சாளர். அவருக்கு எதிராக விளையாடுவது நன்றாக இருக்கிறது. கரியரின் பிந்தைய நாட்களில் சென்று தற்போதைய காலங்களை திரும்பிப் பார்க்கும் போது நாங்கள் பும்ராவை எதிர்கொண்டோம் என்று பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும்.

மிகுந்த சவாலை கொடுக்கக் கூடிய அவரை இன்னும் சில முறை எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன். அவருக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்ற ஆலோசனைகளை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சொல்லவார்கள்.

டிராவிஸ் ஹெட்

அதைப் பற்றி நாங்கள் அடுத்த சில நாட்களில் பேசுவோம். பும்ரா மற்ற பவுலர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்கிறார். எனவே அவரை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுடைய வழியை கண்டறிய வேண்டும்” என்று பும்ரா குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com