2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்தியாவுக்கானது.
நாங்கள் விளையாட நினைத்த அதே விதமான கிரிக்கெட்டையே இந்தப் போட்டியிலும் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு என்று நினைத்தோம்.
ஆட்டம் தொடங்கியதும் 0/1 என்ற நிலையில், யாரோ ஒருவர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் இஷான் கிஷன் சற்று வித்தியாசமாக, ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனையுடன் விளையாடினார்.
அவர் அந்த பொறுப்பை எடுத்த விதம் உண்மையிலேயே அசாதாரணமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தை கணிப்பது சற்று கடினம்.