கரோனா வைரஸைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கரோனா பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். கரோனாவை வெல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக அவசியம். சத்தான உணவைச் சரிவிகிதத்தில் சாப்பிடுவதுடன் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
“இஞ்சி உணவாகவும் மருந்தாகவும் செயல்படக்கூடியது. வாந்தி, தலைசுற்றல் போன்றவற்tறைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும், சளி, காய்ச்சல், இருமலுக்கு நல்லது” என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். இஞ்சியைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.