நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னையை பலரும் அனுபவித்திருப்போம். இந்தியாவில் இந்த பாதிப்பு மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு கோடி பேர் இந்தப் பிரச்னைக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

நீண்டநேரம் நின்றுகொண்டே பணியாற்றும் ஆசிரியர்கள், போஸ்ட்மேன், செவிலியர்கள், மருத்துவர்கள், சமையல் கலைஞர்கள், மார்கெட்டிங், கட்டுமானத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் போன்றோரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், இதுபோன்ற பணியில் ஈடுபடாதவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதற்கான அறிகுறிகள் 7-8 வருடங்களுக்கு பிறகே வெளியே தெரியும்.
அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர் பரிந்துரையுடன் மருந்து, மாத்திரைகள் மற்றும் கம்ப்ரஷன்ஸ் ஸ்டாக்கிங்ஸ் (சாக்ஸ்) அணிவதன் மூலம் இதற்குத் தீர்வு காணலாம். வெரிகோஸ் வெயின்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் Avis Hospital இணைந்து நடத்தும் ‘வெரிகோஸ் வெயின்ஸ்…வெல்வது எளிது’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி ஜூன் 4-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

Avis மருத்துவமனையைச் சேர்ந்த இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் மற்றும் வெரிகோஸ் வெயின்ஸ் மருத்துவர் கண்ணன் குணசேகரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குவார். வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்கு என்ன வழி, பிரச்னை ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் அளிப்பார்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நேரடியாகப் பதில் அளிப்பார். ஜூன் 4-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.