நம்ம திருச்சியில் டர்கீஸ் ஐஸ்க்ரீம்.. உடனே போய் விளையாடி ஐஸ்கிரீம வாங்கிட்டு வாங்க!

Share

பெரிய பெரிய கடைகளில் சாப்பிடுற காஸ்ட்லியான ஐஸ்கிரீம், தள்ளு வண்டியில வித்துட்டு போற குல்பி ஐஸ்கிரீம், இன்னும் கிராமங்களில் கிடைக்கக்கூடிய குச்சி ஐஸ் கிரீம் இதெல்லாம் சாப்பிட்டிருப்போம். சமூக வலைத்தளங்களில் அதிகமா பகிரப்பட்டு வந்த டர்கிஸ் ஐஸ்கிரீம், நம்ம போன்ல பார்த்த டர்கீஸ் ஐஸ்கிரீம் நம்ம பக்கத்துலயே வந்துருச்சு.

இந்த கடை திருச்சி தில்லைநகர் 10த் கிராஸ்ல இருக்க கனெக்சன் காஃபேஎன்ற பெயரில் செயல்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. கடை திறக்கும் நேரம் மதியம் 12 முதல் இரவு 12 மணி வரைக்கும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதன் விலை பார்த்தால் தொடக்க விலை 80 ரூபாய் முதல் இருக்கிறது.

இதில என்ன பண்ணுவாங்கன்னா, அவங்க கொடுக்கிற ஐஸ்கிரீமை நீங்க கேட்ச் பண்ணணும்.அப்படி ஐஸ்கிரீம்-அ நீங்க கேட்ச் பண்ணிட்டீங்கன்னா அந்த ஐஸ்கிரீம் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கும். அப்படி அந்த ஐஸ் கிரீம் உங்களால வாங்க முடியலன்னா அதுக்கு நீங்க காசு கொடுத்து தான் வாங்கிட்டு போகனும். சாக்லேட், வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச், பனானா போன்ற ஃப்ளேவர்கள் இங்கு கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பிளேவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.இங்க கிடைக்கும் ஐஸ்கிரீம் ஆட்டுடைய பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே சுவை மிகுந்ததாக இருக்கிறது என்று ‌வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com