நமக்கு தேவையான ஐஸ்கிரீமை நாமலே எடுத்துக்கலாம்..! திருச்சியில் ஒரு இத்தாலிய ஐஸ்கிரீம் கடை..!

Share

திருச்சி தில்லை நகர் 11வது தெருவில் Softy 100 என்ற பெயரில்  ஐஸ்கிரீம் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான ஐஸ்கிரீம்களை பல்வேறு வகைகளில் இருந்து தேர்வு செய்வதுடன், அவர்களை நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட டாப்பிங்ஸ் வகைகளும் கிடைக்கின்றன. எவ்வித ரசாயன பொருட்களும் சேர்க்காமல் இங்கு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. 1940‌ம் ஆண்டுகளில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த Self Service முறையானது பிரான்ஸ், பிரேசில், போலந்து ஆகிய நாடுகளிலும் பரவியது. இது ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்படும் முறையாக உள்ளது.

திருச்சியில் விற்பனையாகும் ஐஸ்கிரீம்

இந்தியாவில் பல்வேறு முன்னணி நகரங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த இத்தாலிய ஐஸ்கிரீம் தற்போது திருச்சியிலும் அதே சுவை, பாரம்பரியம் மாறாமல் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ஐஸ்கிரீம் அதற்கான டாப்பிங்ஸ் எடுத்துக் கொண்டு எடை இயந்திரத்தில் வைத்து அதிலே பில்லையும் பெறலாம்.

இங்கு ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், அல்போன்ஸா மேங்கோ, பனானா உட்பட 6 விதமான ஃபிளேவர்வர்கள் தினமும் கிடைக்கிறது. வாரத்திற்கு 2 நாட்கள் ஃபிளேவர்கள் மாற்றப்படுகிறது. ஒரு கிராம் ஐஸ்கிரீம் 96பைசா க்கு கொடுக்கப்படுகிறது . இந்த ஐஸ்கிரீம்களை தினமும் அவர்களே தயாரித்து வாடிக்கை யாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

Candy, sprinkle Cone, Weffer, dry fruits, syrup, chopper nuts, chocolate chips, chocolate balls, உட்பட 100 க்கும் மேற்பட்ட டாப்பிங்ஸ் வகைகள் இங்கு கிடைக்கின்றன. இந்த கடை காலை 9மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படுகிறது. இந்த கடைக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com