நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜ நிர்வாகிகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

Share

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும்,  சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபியை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது. குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் இந்திய தூதரை நேரில் அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி மதரீதியாக பதற்றத்தை உருவாக்கி மிகப் பெரிய வன்முறை கலவரத்தை தூண்டுவதாக அமைந்துள்ள பாஜ நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com