நடிகர் அஜித் குமார் பிறந்த நாள்: இவரை பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?

Share

அஜித் பிறந்த நாள்

பட மூலாதாரம், SURESH CHANDRA

படக்குறிப்பு,

நடிகர் அஜித் குமார்

‘அமராவதி’யில் ஆரம்பித்து ‘காதல் மன்னன்’, ‘ஆசை’, ‘அமர்க்களம்’ என தொடர்ந்து ‘வலிமை’ வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது. மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாள். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

* சினிமாவில் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் நடிக்க வருவதற்கு முன்பு தன்னுடைய ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார்.

•நடிகர் அஜித் சமீபத்தில் தன்னை ‘தல’ என்ற அடைமொழியோடு இனி அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘தீனா’ படத்தில் நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான ‘மகாநதி’ சங்கர் தான் அஜித்தை ‘தல’ என்று அழைப்பார். அதற்கு பிறகே அவருக்கு ‘அந்த அடைமொழி’ பிற படங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டது.

•’படிப்பு நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கியம். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். பின்னாளில் படிக்காமல் போய் விட்டேன் என பல முறை வருத்தப்பட்டது உண்டு. தன்மானம் மிக முக்கியம். நீங்கள் விரும்பிய வேலையை முழு மூச்சாக செய்யுங்கள்’ என்பது தான் தன் ரசிகர்களுக்கு அஜித் கொடுக்கும் ‘ஆல்டைம் அட்வைஸ்’.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com