அந்த வீடியோவில் விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை பற்றியும், வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும் பேசியிருக்கிறார். இவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து BCCI அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா BCCI- ன் தேர்வுக்குழுத் தலைவராக தோனியை நியமிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ இப்போது BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தலைமை செயலாளர் ஜெய் ஷா இருவரும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும், புதிய தேர்வுக்குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் நேரம் வந்துவிட்டது.