இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சிஎஸ்கே அணி 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இதுவரை தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இந்நிலையில், `முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தோனியைப் போல் எந்த ஒரு கேப்டனும் இருந்ததில்லை’ என தோனியைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
தோனியைப் பாராட்டி பேசிய சுனில் கவாஸ்கர், `சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்று நன்றாகவே தெரியும். அதற்கு தோனியின் கேப்டன்ஷிப்தான் காரணம். 200 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியிருப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.