`தோனியுமில்லை, கோலியுமில்லை’ – பாரா ஒலிம்பிக் தங்க நாயகனுக்கு பிடித்த கிரிக்கெட்டர் இவரா? | Paris paralympics 2024 gold medalist Navdeep singh’s favourite cricketer

Share

இந்த நிலையில், நவ்தீப் சிங் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் தோனியுமில்லை, கோலியுமில்லை என மனம் திறந்திருக்கிறார். முன்னதாக, யூடியூப் சேனல் உரையாடலில் கலந்துகொண்ட நவ்தீப் சிங்கிடம், “நீங்கள் தோனியின் ரசிகரா இல்லை கோலியின் ரசிகரா?” என நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபங்கர் மிஸ்ரா கேள்விகேட்டார்.

தோனி - கோலி - ரோஹித்தோனி - கோலி - ரோஹித்

தோனி – கோலி – ரோஹித்

அதற்குப் பதிலளித்த நவ்தீப் சிங், “எனக்குப் பிடித்த கிரிக்கெட்டர் ரோஹித் சர்மா. ஏனெனில் அவர் நன்றாக விளையாடுகிறார். அவர் இரட்டைச் சதம் அடித்ததிலிருந்து அவரின் ரசிகன் நான்” என்று கூறினார்.

நவ்தீப் சிங்நவ்தீப் சிங்

நவ்தீப் சிங்

அதைத்தொடர்ந்து, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது நவ்தீப் சிங் வெளிப்படுத்திய கொண்டாட்டத்தைக் குறித்து பேசிய சுபங்கர் மிஸ்ரா, “இந்த உலகம் உங்களை விராட் கோலியுடன் ஒப்பிடுகிறது. ஒருசிலர் உங்களை விராட் கோலியின் தம்பி என்றும், இன்னும் சிலர் உங்களை விராட் கோலி 2.0 என்று கூறுகிறார்கள்” என்றார். அப்போது, “இல்லை. விராட் கோலி ஒரு நல்ல வீரர். ஆனால், நான் என்ன விரும்புகிறனோ அதுதான் நான்” என்றார் நவ்தீப் சிங்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com