தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவப் பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் கட்டப்பட்டது. இதற்கான கட்டட பணிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு கட்டடத்தை, டெல்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குநர் டாக்டர் ரகு, இந்திய ஹோமியோபதி மருத்துவத்தின் இணை இயக்குநர் பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.