தேனி அருகே உள்ள தப்புக்குண்டு மைதானத்தில் தேனி கிரிக்கெட் அகாடமி சார்பில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக சேட்டிலைட் சென்டர் திறப்பு விழா நேற்று (ஜூன் 7) நடைபெற்றது. இவ்விழவை இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர்.
இந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காகவும் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி காண்பதற்காகவும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை புரிந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கூறுகையில்,”கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் மைதானத்தில் தினமும் 2 மணி நேரமாவது செலவிட வேண்டும். பயிற்சி மேற்கொள்ளும்போது கிரிக்கெட் குறித்து பல விஷயங்கள் தானாகவே அவர்களுக்கு தெரியவரும்.
தேனிக்கு வந்த வருண் சக்கரவர்த்தி
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
மேலும் இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் தேனியில் இருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாவார்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் முறையான உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டுக்குள் வைத்திருந்தாலே போதும். அவர்கள் காயங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்” என அறிவுரை வழங்கினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.