தெர்மாகோல் எடுத்துகொண்டு கிளம்புங்கள்.. செல்லூர் ராஜுவுக்கு செந்தில் பாலாஜி ட்விட்

Share

மதுரை சித்திரை விழாவில் ‘அணில்கள்’ வராமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று மின்வெட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக விமர்சித்த நிலையில், சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத்துறை  மானியம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது, அதனால் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், அணில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்  என்று பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் இடையே சிரிப்பலை எழுந்தது.

இதற்கு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி எதுவும் பதிலளித்து பேசவில்லை. எனினும், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிலளித்துள்ளார். செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து ‘தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com