தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: விஜயகாந்த் வலியுறுத்தல்

Share

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம், காலத்துக்கும் அழியாத ஒரு பழியை தமிழகத்துக்கு ஏற்படுத்தி விட்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நாம் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற ஒரு சம்பவத்தை நாம் வாழும் காலத்தில் கண்முன்னே கண்டது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. உண்மையில் யார் தவறு செய்தவர்கள் என்பதை கண்டறிந்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com