தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் எடப்பாடி உட்பட 17 பேரை கைது செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

Share

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாக பார்க்கப்படுகிறது. இது குறித்து உளவுத்துறை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, அன்றைய முதல்வர் எடப்பாடி, ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், ஐபிஎஸ் அதிகாரிகள், கலெக்டர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் சட்ட ரீதியாக கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com